இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ஏப்ரல் 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரும் எனக் குறிப்பிட்டிருந்தார். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார்.


