நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள் மூலம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் இந்தியாவில் கட்டுமானத் திட்டங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் கணக்கீடு முறைகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, கட்டுமான நிலையில் உள்ள உட்கட்டமைப்பு மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட் திட்டங்களின் கடன்களுக்கு 5% தொகையை ஒதுக்குமாறு, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
ஆர்பிஐ விதிமுறை அமலாகும் நிலைஇய்ல், இப்பிரிவுக்கு வழங்கப்படும் கடன் அளவுகள் பெரிய அளவில் குறையும். இதன்மூலம் நாட்டின் உட்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும். தற்போது கமர்சியல் ரியல் எஸ்டேட் திட்ட கடன்களுக்கு 1%, குடியிருப்பு ரியல் எஸ்டேட் திட்ட கடன்களுக்கு 0.75%, பிற கட்டுமான கடன்களுக்கு 0.40% என வங்கிகள் பாதுகாப்பு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது திட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் தொகைக்கு 5% பாதுகாப்பு ஒதுக்கீட்டை அளித்துள்ளது.
இதையும் படிங்க :
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? – முழுவிபரம் இதோ
எஸ்பிஐ உள்பட பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகளைத் தளர்வு அளிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஏலத்தில் பங்கேற்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, எஸ்பிஐ வங்கி ரூ.9,000 கோடி கூடுதலாக ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நிதியாக ஒதுக்க வேண்டியிருக்கும். இது தற்போது ஒதுக்கப்படும் ரூ.32,000 கோடியை விட, 28% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
