Last Updated:
ஆந்திராவில் தொடர் மின்தடை காரணமாக, போதிய மின்சாரம் கிடைக்காமல் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் நிலவும் தொடர் மின்தடை காரணமாக, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக, புதுச்சேரியின் ஏனாமிற்கு பேரல்கள் மற்றும் கேன்களுடன் மக்கள் படையெடுத்தனர்.
ஆந்திராவில் தொடர் மின்தடை காரணமாக, போதிய மின்சாரம் கிடைக்காமல் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்களைக் காப்பாற்ற தங்களது மோட்டார் பம்புகளை இயக்க டீசல் இன்ஜின்களை விவசாயிகள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திற்கு உட்பட்ட பெட்ரோல் நிலையங்களில் ஆந்திர விவசாயிகள் டீசலை வாங்க வரிசை கட்டி நின்றனர். அந்த வகையில் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால், உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்த நிலையில், காலை 5 மணி முதல் 8 மணி வரை உள்ளூர் மக்கள் பெட்ரோல், டீசல் வாங்கிக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார மோட்டார்களுக்கு மாற்றாக டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கான செலவும் அதிகரித்துள்ளது.
Apr 28, 2026 11:54 AM IST


