Last Updated:
குழந்தைகள் பன்றிகளை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பாகச் சில நிஜக் குட்டிப் பன்றிகள் இந்த நிகழ்வுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
எஸ்டோனியா நாட்டில் நடைபெற்ற வினோதமான ‘பன்றி போலக் கத்தும்’ போட்டி, பார்வையாளர்களைக் கவர்ந்தது. அந்நாட்டின் டார்டு நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பன்றியின் ஒலியைப் போலவே எழுப்பி மக்களை வியப்பில் ஆழ்த்தினர்.
இந்த வினோதப் போட்டியில் ஆன்ட்ரஸ் மைலெஹ்ட் என்பவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், பன்றி வளர்ப்புத் துறையைச் சேர்ந்த மூன்று பேர் நடுவர் குழு, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.
Estonia holds a pig squealing championship
Contestants in Tartu competed on authenticity, volume, and showmanship — judged by pig farming expertsThe prize is half a pig carcass and a set of sausages pic.twitter.com/evQqpSMNwX
— RT (@RT_com) April 26, 2026
ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் கட்டுப்பாடுகள் காரணமாக, எஸ்டோனியாவில் பன்றிப் பண்ணைகளுக்குள் மக்கள் செல்ல அனுமதி இல்லை. இதனால், குழந்தைகள் பன்றிகளை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பாகச் சில நிஜக் குட்டிப் பன்றிகள் இந்த நிகழ்வுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

