இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோரின் விவாகரத்து வதந்திகளுக்கு நடுவே, இவர்களின் மகன் அகஸ்தியா, க்ருணால் உடன் பொழுதை கழிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
நடந்து முடிந்த 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த தனது கணவரின் குடும்பப் பெயரான பாண்டியா என்பதை நீக்கி விட்டார். அத்துடன், தம்பதிகளாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களையும் பகிரவில்லை. அத்துடன், அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின்போதும் அவரை காண முடியவில்லை.
இதையும் படிங்க : தமிழ் நடிகர்களில் இவரை ரொம்ப பிடிக்கும்.. சூர்யகுமாரின் சாய்ஸ் யார் தெரியுமா?
கடந்த காலங்களில் நடாஷாவின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவிக்கும் ஹர்திக் பாண்டியா, இந்த முறை வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், இருவரும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவோ, நடாஷாவோ இதுவரை விவாகரத்து செய்தியை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. இந்நிலையில், ஹர்திக் – நடாஷாவின் மகன் அகஸ்தியா, க்ருணால் பாண்டியா வீட்டில் விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
க்ருணால் பாண்டியாவின் மகன் கவிரும், ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியாவும் படம் வரைய பயன்படுத்தும் பெயிண்ட் டப்பாக்களை வைத்து, க்ருணால் முகத்தில் வரையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், க்ருணாலின் மனைவி முகத்தில் பல வண்ணங்களை இரு குழந்தைகளும் பூசி மகிழ்கின்றனர். இந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள க்ருணால் பாண்டியாவின் மனைவி பன்குரி சர்மா, தங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரசிகர்கள் பலரும், ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோரின் ரீல்ஸ்களை பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
