சியோல், வடகொரியாவின் கடுமையான சட்டங்களுக்கு பயந்து, அங்கிருந்து ஒரு குடும்பமே தப்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வட கொரியா சகோதரர்கள், தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு படகு மூலம் தென் கொரியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர் அந்த அனுபவம் பற்றி கிம் யி கியோக் கூறியதாவது:-
கிம் இல் கியோக் மற்றும் கிம் யி கியோக் சகோதரர்களின் குடும்பத்தினர் வட கொரியாவில் இருந்து படகு மூலம் தப்பித்து செல்ல முடிவு செய்தனர். இந்த திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கிம் சகோதரர்களின் தந்தை தொடங்கிய நிலையில் அவர் தப்பித்து செல்வதற்கு முன்பே இறந்து விட்டார். கிம் இல் ஹியோக் மீன் பிடிக்கக் கற்றுக்கொண்டு, சொந்தமாகப் படகு வாங்கியுள்ளார்.




