மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களால் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் முழுமையான சேத மதிப்பீட்டை பென்டகன் வெளியிட தயங்கினாலும், புலனாய்வு அறிக்கைகள் மற்றும் செயற்கைகோள் படங்கள் வாயிலாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உட்கட்டமைப்பு சேதங்களின் பாதிப்பு அதிகமாகவே உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று வகையிலான இழப்பு
நிதி ரீதியிலான இழப்பு, உடனடி உபகரண இழப்பு மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு சீரமைப்பு என்ற பிரிவுகளின் கீழ் சேதங்களுக்கான நிதி தேவைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.

இழப்புகளை ஈடு செய்ய பென்டகன் கோரியுள்ள கோடி ரூபாய்
இதையடுத்து, அமெரிக்க அரசிடம் பென்டகன் தற்போது சாதனை அளவாக 18.80 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கோரி வருகிறது.

போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அமெரிக்கா தன் ராணுவ நடவடிக்கைகளுக்காக 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டிருந்தது.
மேலும், போர் தொடங்குவதற்கு முன்பே, அமெரிக்க ஜனாதிபதி ொடனால்ட் ட்ரம்ப் 1.5 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது முந்தைய ஆண்டை விட 50 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்கனவே, 2026ம் ஆண்டுக்கான 78.81 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
