கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழைக்கு கென்யா முழுவதும் வெள்ளக்காடாகா காட்சியளிக்கிறது. கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின் படி 32 பேர் கனமழைக்கு உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டோரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: காதலனுக்கு ஒரே நாளில் 100 முறை வீடியோ கால் செய்த காதலி… ஃபோனை எடுக்காததால் விபரீத முயற்சி!
இந்த மழை, வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட தலைநகர் நைரோபியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதனிடையே கென்யா வானிலை ஆய்வு மையம் இன்னும் நாட்டின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
