Last Updated:
இந்திய தேசிய ஆவணக்காப்பகம் சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது.
காற்று எரிசக்தியில் உலகளவில் இந்தியா 4 ஆம் இடத்தை பிடித்திருப்பதாக பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் பிரதமர் மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் காற்று எரிசக்தி ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது. இந்தியா சமீபத்தில் காற்று எரிசக்தி உற்பத்தியில் 56 கிகாவாட் (56 GW) என்ற மிகப்பெரிய மைல்கல்லைக் கடந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் காற்று எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றன. ஒரு காலத்தில் தரிசு நிலங்களாகக் கருதப்பட்ட கட்ச், பதான் மற்றும் பனஸ்காண்டா போன்ற பகுதிகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மையங்களாக மாறி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
அறிவியலை வளர்ச்சியுடன் இணைப்பதே இந்தியாவின் நோக்கம். சிவில் அணுசக்தி திட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள ‘ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்’ அதன் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை. இது முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்குச் சான்றாகும்.
குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பீட்டிங் ரிட்ரீட்’ (Beating Retreat) சடங்கில் இந்திய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரியங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. இந்த இசை தற்போது ‘Waves OTT’ தளத்தில் கிடைப்பதாகவும், மக்கள் அதைக் கேட்டுப் பெருமிதம் கொள்ள வேண்டும்.
இந்திய தேசிய ஆவணக்காப்பகம் சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது. என்று தெரிவித்தார்.
காற்று எரிசக்தியில் உலகளவில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா.. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!


