அதேபோல சென்னையில் எல்.பி.ஜி தட்டுப்பாட்டால், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி இறக்குமதி குறைந்துள்ளது. இதனால், சென்னை மாநகரில் வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான எரிவாயு நிரப்பும் பங்குகள் மூடப்பட்டுள்ளன.


