யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 2 கிராம் 35
மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

