• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : சூர்யவன்ஷியின் அதிரடி சதம் வீண்.. 229 ரன்கள் இலக்கை அசால்ட்டாகத் தூக்கிய சன்ரைசர்ஸ் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : சூர்யவன்ஷியின் அதிரடி சதம் வீண்.. 229 ரன்கள் இலக்கை அசால்ட்டாகத் தூக்கிய சன்ரைசர்ஸ் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 25, 2026 11:45 PM IST

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.

அபிஷேக் சர்மா - இஷான் கிஷன்
அபிஷேக் சர்மா – இஷான் கிஷன்

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி, இன்னும் 9 பந்துகள் மீதம் இருந்த நிலையில் இலக்கை எட்டியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜுரெல் ஜோடி அதிரடியான அடித்தளம் அமைத்தனர். வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களைப் பறக்கவிட்டு, வெறும் 37 பந்துகளில் 103 ரன்கள் (5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டமிழந்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த துருவ் ஜுரெல் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் ஈஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி களம் புகுந்த ஹைதராபாத் அணிக்கு தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

இஷான் கிஷன் வெறும் 31 பந்துகளில் 74 ரன்களும் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்), அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 57 ரன்களும் விளாசினர். இவர்களின் அதிரடியால் ரன் வேகம் மளமளவென உயர்ந்தது. நடுவரிசையில் நிதிஷ் குமார் ரெட்டி 36 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 29 ரன்களும் எடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் சலில் அரோரா மற்றும் அனிகேத் வர்மா ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு, 5 விக்கெட் இழப்புக்கு 18.3 ஓவர்களிலேயே 229 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வைபவ் சூர்யவன்ஷியின் சதம் வீணான நிலையில், ஹைதராபாத் அணியின் கூட்டு முயற்சி அந்த அணிக்கு ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

First Published :

Apr 25, 2026 11:45 PM IST

Read More

Previous Post

தமிழகத்தில் தேர்தல் விதிகள் தளர்வு

Next Post

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் – அன்வார் – Malaysiakini

Next Post

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் – அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin