சமீபகாலமாக இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து வருவது சர்வதேச ரீதியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ‘ப்னே மெனாஷே’ (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 240-க்கும் மேற்பட்டோர் அண்மையில் இஸ்ரேலைச் சென்றடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 6,000 பேரை இஸ்ரேலில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள் தங்களை இஸ்ரேலின் பழங்கால காணாமல் போன கோத்திரங்களில் ஒன்றின் வழித்தோன்றல்களாகக் கருதுகின்றனர்.
இவர்களின் வருகையானது இஸ்ரேலிய விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக வரவேற்கப்பட்டதுடன், இவர்கள் அங்கு குடியுரிமை பெறுவதற்கு முன்னதாக யூத மதத்திற்கு மாறும் நடைமுறைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
மேற்படி விடயம் மற்றும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலைமை தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

