நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெறவுள்ள 35ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி – பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டி, இன்று (25.04.2026) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்புத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி திகழ்கிறது. விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அணிக்குச் சாதகமாக அமையும்
மறுபுறம், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் உள்ளது.
எனவே, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் இன்று விளையாடுவது அந்த அணிக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை நடந்த ஐ.பி.எல். வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா 17 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இன்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் தனது தோல்வியில் இருந்து மீண்டு வருமா அல்லது பஞ்சாப் கிங்ஸ் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

