• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஏப்ரல் இறுதியில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஏப்ரல் இறுதியில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
ஏப்ரல் இறுதியில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

வேத ஜோதிடத்தின்படி, புத்தி, பேச்சு, வியாபாரத்திற்கு காரணமான புதன் கிரகம் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வேத ஜோதிடத்தின்படி, புத்தி, பேச்சு, வியாபாரத்திற்கு காரணமான புதன் கிரகம் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு நிதி இழப்பு, வேலை அழுத்தம், குடும்ப சண்டைகள், உடல்நலப் பிரச்சனைகள் என பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும். விநாயகர் வழிபாடு, பச்சை நிறப் பொருட்கள் தானம், புதன் மந்திரம், புதன் கிழமை விரதம் போன்ற பரிகாரங்கள் மூலம் இந்த நெகட்டிவ் விளைவுகளைத் தணிக்கலாம்.

வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இந்தப் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசிக்குப் புதன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாகப் படிப்பு, வியாபாரம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அதோடு பேசும் போதும் வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இப்போது ஏப்ரல் மாத இறுதியில் புதன் மேஷ ராசிக்குச் செல்வதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்: ரிஷப ராசியின் 12 ஆம் வீட்டிற்குப் புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தைச் செலவழிக்க நேரிடும். மனப் பதட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்க நேரிடும். பண விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும். எந்த முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிதி தொடர்பான முடிவையும் பலமுறை யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி: கன்னி ராசியின் 8 ஆம் வீட்டிற்குப் புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படலாம். இதன் மூலம் வேலையில் அழுத்தம் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கையில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தொழில் ரீதியாகவும் பொறுமையாக இருந்து நன்கு யோசித்து எந்த முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மகரம்: மகர ராசியின் 4 ஆம் வீட்டிற்குப் புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடையும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் மனதளவில் அதிகம் சோர்வடைவீர்கள். மேலும் இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஒரு சவாலான திட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளது, அது மிகவும் கடினமாகத் தோன்றக்கூடும். மேலும் இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் பேச்சு பல பிரச்சனைகளில் சிக்க வைக்கும்.

புதன் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள்: மேஷ ராசிக்குச் செல்லும் புதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, விநாயகரை வழிபடுவது, புதனுக்கு உரிய மந்திரத்தைப் பாராயணம் செய்வது, பச்சை நிறப் பொருட்களைத் தானம் செய்வது, பசுக்களுக்குத் தீவனம் அளிப்பது, புதன் கிழமைகளில் விரதம் இருப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்களின் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Read More

Previous Post

200 மில்லியன் ரிங்கிட் கடன் விண்ணப்பத்தில் தவறான விவரங்களை அளித்ததற்காக முன்னாள் தொலைத்தொடர்பு நிறுவன இயக்குநர் கைது | Makkal Osai

Next Post

பக்தர்கள் சனாதனத்தை நிரூபிக்க புதிய வழி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பக்தர்கள் சனாதனத்தை நிரூபிக்க புதிய வழி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகம் | India News (இந்தியா செய்திகள்)

பக்தர்கள் சனாதனத்தை நிரூபிக்க புதிய வழி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin