ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியைத் தொடங்கியதில் இருந்து அவருடனே பயணித்த அக்கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா உட்பட 7 எம்.பி.க்கள் இன்று திடீரென அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதில் ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. ராகவ் சத்தா, “என் ரத்தமும் வியர்வையும் சிந்தி, என் இளமைக்காலத்தின் 15 ஆண்டுகளை அர்ப்பணித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது.
#WATCH | 2/3rd MPs of AAP in Rajya Sabha announce merging with the BJP.
AAP MP Raghav Chadha says, “There are 10 AAP MPs in the Rajya Sabha, more than 2/3rd of them are with us in this. They have signed and this morning we submitted the signed letter and documents to the Rajya… pic.twitter.com/mn4kuYs2ht— ANI (@ANI) April 24, 2026
இப்போது இந்தக் கட்சி தேச நலனுக்காகச் செயல்படாமல், அதன் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நான் தவறான கட்சியில் சரியான நபராக இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. எனவே, இன்று நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். மூன்றில் இரண்டு பங்கு விலகுவதால் கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயாது.
தற்போது நான், அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் இங்கு இருக்கிறோம். மேலும், ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், விக்ரம் சாஹ்னி மற்றும் ராஜேந்தர் குப்தா ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் பிரபல முகங்களாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பரவலாக அறியப்பட்ட அசோக் மிட்டல், ஸ்வாதி மாலிவால் ஆகியோரும், சந்தீப் பதக், விக்ரம் சாஹ்னி மற்றும் ராஜேந்தர் குப்தா, சந்தீப் பதக் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகி இருப்பது டெல்லி அரசியலிலும், ஆம் ஆத்மியின் உட்கட்சி அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஏழு பேர் பஞ்சாபிலிருந்தும், மூன்று பேர் டெல்லியிலிருந்தும் தேர்வாகியுள்ளனர். இந்தச் சூழலில் தான் மாநிலங்களவையின் அக்கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது அக்கட்சிக்கு மாநிலங்களவையில் பலத்தையும் இழக்கச் செய்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், “பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்த நல்லாளுமைப் பணிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வேலையை பாஜக செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணையவுள்ளனர்.
#WATCH | Delhi | AAP MP Sanjay Singh says, “Operation Lotus is being executed on the Punjab Government…ED, CBI is being used to execute this Operation Lotus…The people of Punjab will never forget these ‘traitors’…” pic.twitter.com/VXKN4hPbmk
— ANI (@ANI) April 24, 2026
பஞ்சாப் மக்கள் இந்த 7 பெயர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். பஞ்சாப் மக்கள் அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பஞ்சாப் அரசாங்கத்தின் மீது ‘ஆபரேஷன் தாமரை’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ‘ஆபரேஷன் தாமரை’ நிறைவேற்ற அமலாக்கத்துறையும், சிபிஐயும் பயன்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் மக்கள் இந்த ‘துரோகிகளை’ ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
பஞ்சாப் முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் மான், “சரத் பவாரின் கட்சி, சிவசேனா (UBT) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமும் பயன்படுத்தப்பட்ட அதே ‘வாஷிங் மெஷின்’ பஞ்சாபில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாஜகவுக்கு எந்தவொரு அடித்தளமும் இல்லை.
#WATCH | Chandigarh | On 2/3rd MPs of AAP in Rajya Sabha announce merging with the BJP, Punjab CM Bhagwant Mann says, “…The seven MPs who are joining the BJP don’t represent Punjab, they are traitors…They won’t get anything in the BJP also…” pic.twitter.com/2FVufgqUyJ
— ANI (@ANI) April 24, 2026
பாஜகவில் இணையும் இந்த ஏழு எம்.பி.க்களும் பஞ்சாப்பை பிரதிபலிக்கமாட்டார்கள். துரோகிகளான அவர்களுக்கு பாஜகவிலும் எதுவும் கிடைக்காது” எனத் தெரிவித்தார்.
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “பஞ்சாப் மக்களுக்கு பாஜக மீண்டும் அநீதியை இழைத்துவிட்டது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
बीजेपी ने फिर से पंजाबियों के साथ किया धक्का
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 24, 2026
ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் உடனடியாக டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அங்கு ஒருவருக்கு ஒருவர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
#WATCH | Delhi: Rajya Sabha MPs Raghav Chadha, Sandeep Pathak and Ashok Mittal meet BJP National President Nitin Nabin at the party headquarters
2/3rd MPs of AAP in the Rajya Sabha announced merging with the BJP. pic.twitter.com/LGhJ0bHyJ1
— ANI (@ANI) April 24, 2026
டெல்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்த மாநிலம் பஞ்சாப். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் 2027ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயலாற்றிவருகிறது.
இந்தச் சூழலில், ஆம் ஆத்மியில் இருந்து ஏழு எம்.பி.க்கள் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்திருப்பதையும், வர இருக்கும் பஞ்சாப் மாநிலத் தேர்தலையும் தொடர்புப்படுத்தி இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

