
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 30 ஆம் தேதி நடைபெறுவதால், அதனைத் தொடர்ந்து வரும் மே 31 ஆம் தேதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 30 ஆம் தேதி நடைபெறுவதால், அதனைத் தொடர்ந்து வரும் மே 31 ஆம் தேதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், முன்னதாக மே 2 ஆம் தேதி வழங்கப்பட்டிருந்த விடுமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. மேலும், இம்முறை வெசாக் வாரம் மே 27 முதல் ஜூன் 2 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31 ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, முன்னதாக மே மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க, இம்முறை வெசாக் வாரம் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த மாற்றத்தின்படி, மே 31 ஆம் திகதி பொது விடுமுறையாக அமையும் என்றும், வெசாக் வாரத்தின் போது மற்ற நாட்கள் வழமைபோல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
