அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையிலும், இரண்டாவது சுற்று பேச்சு எப்போது நடைபெறும் என்ற சந்தேகம் நீடித்து வருகிறது. இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானில் யார் தலைவர் என்பதை முடிவுசெய்ய முடியாத நிலை இருப்பதாகவும், கடுமையான மோதல் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


