இதேபோல், சென்னை அணி தங்கள் எக்ஸ் பக்கத்தில், “சில தருணங்கள் விளையாட்டை விடப் பெரியவை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு இழப்பைச் சுமந்து கொண்டு, நீங்கள் மைதானத்திற்குள் நுழைந்தது உங்களின் மன உறுதியைக் காட்டுகிறது. இன்று நீங்கள் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; தன் தாய்க்காக விளையாடும் ஒரு மகன். உங்கள் ஒவ்வொரு அடியிலும், நீங்கள் வீசும் ஒவ்வொரு பந்திலும் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். உங்கள் அணியினர், ரசிகர்கள் என அனைவரும் உங்களுக்குத் துணையாக இருக்கிறோம். மனவலிமையும், பிரார்த்தனைகளும், என்றும் எங்களின் அன்பும் உங்களுக்கு உண்டு, முகேஷ்” உருக்கமாக பதிவிட்டது. முன்னதாக முகேஷின் தாயின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை அணி வீரர்கள் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


