• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணமான பெண்ணுடன் ஒருதலைக்காதல்.. விரக்தியில் சலவைக்கடைக்காரர் செய்த அதிர்ச்சி செயல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருமணமான பெண்ணுடன் ஒருதலைக்காதல்.. விரக்தியில் சலவைக்கடைக்காரர் செய்த அதிர்ச்சி செயல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 23, 2026 8:33 PM IST

திருமணமான ஆஷாவை தொல்லை செய்வதை கைவிடுமாறும், தொடர்ந்து இவ்வாறு செய்தால் காவல்நிலையத்தில் புகார் அளித்து விடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

News18
News18

மத்தியப் பிரதேசத்தில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் 11 வயது மகனை கழுத்தை அறுத்து நீல கலர் டிரம்மில் போட்டு மறைத்த நபர் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். 

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் கூலி வேலை செய்து வந்தார். ஆஷா உள்ளூரில் வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த 45 வயதான மதுரா ராஜக் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். சலவைக் கடை வைத்து நடத்தி வந்த மதுரா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை ஆஷாவிடம் வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால் அதற்கு ஆஷா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஆஷாவிடம் மீண்டும் மதுரா வற்புறுத்தியிருக்கிறார். தொடர் டார்ச்சரால் ஆத்திரமடைந்த ஆஷா மதுராவை சத்தம் போட்டு விரட்டியிருக்கிறார். அப்போது, இதற்கு தக்கவிலை கொடுக்க வேண்டி வரும் என்று மதுரா மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

மதுரா குறித்து தான் வேலை பார்த்த வீட்டு உரிமையாளரிடம் ஆஷா புகார் கூறியிருக்கிறார். அவர் நேராக மதுராவின் சலவைக் கடைக்குச் சென்று பலர் முன்னிலையில் எச்சரித்திருக்கிறார். திருமணமான ஆஷாவை தொல்லை செய்வதை கைவிடுமாறும், தொடர்ந்து இவ்வாறு செய்தால் காவல்நிலையத்தில் புகார் அளித்து விடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் அத்துமீறல்.. விசாரணையில் இளைஞர் சொன்ன பகீர் தகவல்கள்!

இதனால் மதுராவின் ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது. இந்த சம்பவத்தால் ஆஷாவை பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்துள்ளது. சம்பவத்தன்று ஆஷாவின் வீட்டிற்கு அரிவாளுடன் மதுரா சென்றுள்ளார். அங்கு ஆஷாவின் 11 வயது மகன் சிவராஜ் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுவனைப் பார்த்ததும், ஆஷாவின் மேல் இருந்த அத்தனை கோபமும் சிறுவன் மீது திரும்பியிருக்கிறது.

கையில் வைத்திருந்த அரிவாளால் சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மதுரா, அங்கிருந்த நீல கலர் டிரம்மில் சிறுவனை திணித்து, அதன் மீது துணியைப் போட்டு மூடி வைத்துவிட்டு சென்றுவிட்டார். வெளியில் சென்று இருந்த சிவராஜின் சகோதரி சஜல் பிற்பகலில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மின் விசிறியும், விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. சிவராஜையும் காணவில்லை. அதே நேரம் அங்கிருந்த டிரம் மீது ரத்தக்கரை படிந்த அரிவாள் இருந்துள்ளது. அதைப் பார்த்து மிரண்டு போன சஜல் உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த போலீசார் கதவைத் திறந்து உள்ளே தேடிப் பார்த்தபோது டிரம்மில் சிறுவன் சிவராஜின் உடல் இருந்துள்ளது. தலைமறைவான மதுராவைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவரது போன் ஆப் செய்யப்பட்டு இருந்த போதும், போலீசார் அவரை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

Read More

Previous Post

தாயுடன் நடிகை திரிஷா வாக்களித்தார் (வீடியோ)

Next Post

Petrol, Diesel Price | 5 மாநிலத் தேர்தல் முடிந்ததும் ரூ. 28 உயரும் பெட்ரோல், டீசல் விலை? வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் | வணிகம் போட்டோகேலரி

Next Post
Petrol, Diesel Price | 5 மாநிலத் தேர்தல் முடிந்ததும் ரூ. 28 உயரும் பெட்ரோல், டீசல் விலை? வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் | வணிகம் போட்டோகேலரி

Petrol, Diesel Price | 5 மாநிலத் தேர்தல் முடிந்ததும் ரூ. 28 உயரும் பெட்ரோல், டீசல் விலை? வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin