மலேசிய,ஆசியான்,அளவிலான போட்டியிலும் அமெரிக்காவில் நடைபெற்ற இயங்கலைப் போட்டியிலும் தனது நினைவாற்றல் திறனை வெளிப்படுத்தி சாதனைப் படைத்ததன் வழி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற புண்ணியமித்ரா த/பெ குமரேசன் ( வயது 14 ) கெளரவிக்கும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மடிக்கணினியும் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தது.
பினாங்கு, செயின்ட் ஜார்ஜ் பெண்கள் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் படிவ மாணவியான இவர் இளம் வயதினராக, பை (Pi) மதிப்பின் 300 இலக்கங்களை வெறும் 1 நிமிடம் 18 வினாடிகளில் வெற்றிகரமாக மனப்பாடம் செய்து ஒப்புவித்ததன் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
அவரது இந்தச் சாதனை குடும்பத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல், பினாங்கிற்கும் பெருமையைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இது இளைய தலைமுறையினரைக் கல்வியில் சிறந்து விளங்கத் தொடர்ந்து பாடுபடத் தூண்டுகிறது.அதே சமயத்தில் ஓர் இந்து மாணவி என்ற முறையில் அவரது சாதனை ஊக்குவித்து பாராட்டுவது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என்.ராயரும்,துணைத்தலைவரும் கல்விக்குழு தலைவருமான டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரனும் தெரிவித்தனர்.
புண்ணியமித்ராவிந்த இந்த அசாதாரண சாதனையில் பங்கு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் வாரியம் பெருமிதம் கொள்கிறது.கல்வியை மேம்படுத்து வதற்கும் மனித மூலதனத்தை வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக,வாரியம் சிறந்த மாணவர்களின் வெற்றியைத் தொடர்ந்து ஆதரித்து அங்கீகரிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு இந்து அறப்பணி வாரியம் 50 சிறுநீரக நோயாளிகளுக்கு நிதிவுதவி வழங்கிய நிகழ்ச்சியில் இலக்கவியல் அமைச்சர் கோவிந் சிங் டியோ வழி மடிகணினியையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தது.
கவின்மலர்




