• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 2ஆம் கட்ட பேச்சு: பாக். பறக்கும் ஜே.டி.வான்ஸ்?

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 2ஆம் கட்ட பேச்சு: பாக். பறக்கும் ஜே.டி.வான்ஸ்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் உடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சரக்கு, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


அதேவேளை, ஈரானின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதனிடையே, பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அதன்படி, கடந்த 8ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. 


இந்த காலகட்டத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11, 12 ஆகிய திகதிகளில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


அதேவேளை, 2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால், ஈரான் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.


இந்நிலையில், ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் இன்று செவ்வாய்க்கிழமை (21) 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளது.


இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Read More

Previous Post

செராஸ் பொழுதுபோக்கு மையத் தாக்குதல்: 33 பேருக்குக் கூடுதலாக 10 மாதச் சிறை – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! | Makkal Osai

Next Post

Kerala Fireworks Factory Blast | கேரளாவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து-13 பேர் பலி..

Next Post
Kerala Fireworks Factory Blast | கேரளாவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து-13 பேர் பலி..

Kerala Fireworks Factory Blast | கேரளாவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து-13 பேர் பலி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin