கடந்த ஏப்ரல் 18 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில், இந்தியக் கொடி ஏந்திய இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஈரானியத் தூதரை நேரில் வரவழைத்து, இச்சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து, அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தூதரைச் சந்தித்து, இந்தியாவின் ஆழ்ந்த கவலையை எடுத்துரைத்ததோடு, அப்பகுதியில் இயங்கும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி உள்ளார்.

