• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள்

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



இன்று (21) காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.



இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், காலை 8:45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

விசேட ஆராதனை

அத்துடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள் | 7Th Year Of The Easter Sunday Attacks In Sri Lanka



இதன் காரணமாக அந்த தேவாலயத்தைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.



மேலும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெறவுள்ளதுடன் ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள் | 7Th Year Of The Easter Sunday Attacks In Sri Lanka



இந்த தாக்குதல்கள் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட நிலையில் ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.



இந்த தாக்குதல்களுக்கு பின்னர், தீவிரவாத குழுவாக கருதப்படும் உள்ளூர் அமைப்பு மற்றும் சர்வதேச தீவிரவாத இணைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் நீதிக்கான போராட்டம் 07 ஆண்டுகளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ராஜஸ்தான்: பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்க உள்ள சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கிளம்பிய புகை | Makkal Osai

Next Post

Talks: அமெரிக்கா ரெடி; அதிருப்தி ஈரான்! இஸ்லாமாபாத் மீது உலக நாடுகளின் பார்வை – 'குட்டி' Summary

Next Post
Talks: அமெரிக்கா ரெடி; அதிருப்தி ஈரான்! இஸ்லாமாபாத் மீது உலக நாடுகளின் பார்வை – 'குட்டி' Summary

Talks: அமெரிக்கா ரெடி; அதிருப்தி ஈரான்! இஸ்லாமாபாத் மீது உலக நாடுகளின் பார்வை - 'குட்டி' Summary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin