Last Updated:
மறைந்த போப் பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 மணி நேர இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் அந்த பாதிரியார்.
DJ priest என அழைக்கப்படும் போர்த்துகீசிய பாதிரியார் கில்லெர்ம் பெய்க்சோட்டோவின் இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பிரேசில் மக்கள் பங்கேற்றுள்ளனர்.
போப்பாண்டவரின் தீவிர பக்தரான DJ priest உலகெங்கும் பயணம் செய்து, அனைவரையும் கவரும் இசை நிகழ்ச்சிகள் வாயிலாக மதரீதியிலான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பிரேசிலின் வர்த்தகத் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் இலவச இசை நிகழ்ச்சியை அவர் நடத்தினார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆடியும் பாடியும் மகிழ்ந்தனர்.
போப் பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி மறைந்த நிலையில் முதலாவது நினைவு நாள் நெருங்கி வருகிறது. அதை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த 2 மணி நேர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற ஈர்க்கும் வகையிலான இசை நிகழ்ச்சிகள் இளைஞர்களையும் பக்திக்கு உள்ளாக்கும் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

