• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணத்தை மீறிய உறவுக்கு தடை.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு நடந்த கொடூரம்.. காதலனுடன் தாய் செய்த பகீர் செயல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருமணத்தை மீறிய உறவுக்கு தடை.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு நடந்த கொடூரம்.. காதலனுடன் தாய் செய்த பகீர் செயல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 20, 2026 5:36 PM IST

இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன சகோதரி சமீரா, நரசிங்கலுவை தடுக்க முயற்சித்திருக்கிறார்.

படம் (ஏஐ)
படம் (ஏஐ)

தெலங்கானா மாநிலத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் லட்சுமி. கணவனைப் பிரிந்த இவர், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே ஐந்து வயது மகன் ஸ்ரவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மூத்த மகள் சமீரா பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நரசிங்கலு என்பவருடன் லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. குடிபோதைக்கு அடிமையான நரசிங்கலு, அவ்வப்போது போதை வெறியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களது உறவுக்கு இரு குழந்தைகளும் தடையாக இருப்பதாக நினைத்த நரசிங்கலு அதுகுறித்து லட்சுமியிடம் கூறியிருக்கிறார். மகள் சமீராவை பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டு, மனநிலை பாதிக்கப்ப்டட 5 வயது சிறுவனை கொன்று விடலாம் என்ற தனது கொடூர புத்தியை காட்டியிருக்கிறார் நரசிங்கலு. இந்த திட்டத்திற்கு தாய் லட்சுமியையும் ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்.

அதன்படி சம்பவத்தன்று சரக்கை ஏற்றிக் கொண்டு சலம்பியபடி வந்த நரசிங்கலு, கையில் தயாராக கொண்டு வந்திருந்த மிளகாய்ப் பொடியை சிறுவன் ஸ்ரவன் கண்ணிகளில் கொட்டியிருக்கிறார். இதனால் அலறி துடித்த அந்த சிறுவனை கழுத்தை நெறித்தும் தலையில் கட்டையால் தாக்கியும் நரசிங்கலு கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன சகோதரி சமீரா, நரசிங்கலுவை தடுக்க முயற்சித்திருக்கிறார்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு.. இளம்பெண்ணுக்கு குடும்பத்தினர் செய்த கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

ஆனால் சிறுமியால் நரசிங்கலுவை எதிர்த்து போராடி கொலையை தடுக்க முடியவில்லை. எனவே வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து நடந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினரிடம் அழுது கொண்டே கூறியிருக்கிறார். பொதுமக்கள் வருவதற்குள் கொலை செய்து விட்டு நரசிங்கலு தப்பியோடி விட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து உடனே காமாரெட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசார் சிறுவன் உடலை மீட்டு காமாரெட்டி அரசுமருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.

நரசிங்கலுவை பிடித்த போலீசார் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையை கண்ணால் பார்த்த சாட்சியாக சமீரா வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நரசிங்கலு, கொலைக்கு உடந்தையாக இருந்த லட்சுமி ஆகியோரை கைது செய்த போலீசார், பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருமணத்தை மீறிய உறவுக்கு தடை.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு நடந்த கொடூரம்.. காதலனுடன் தாய் செய்த பகீர் செயல்!

Read More

Previous Post

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

Next Post

PM Kisan | பிஎம் கிசான் 23-வது தவணை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கட்? முழு விவரம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
PM Kisan | பிஎம் கிசான் 23-வது தவணை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கட்? முழு விவரம்! | வணிகம் போட்டோகேலரி

PM Kisan | பிஎம் கிசான் 23-வது தவணை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கட்? முழு விவரம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin