‘எங்களுடைய எந்தக் கப்பலும் அமெரிக்காவிடம் சிக்கவில்லை என்று முன்பு கூறிய ஈரான், பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “ஆக்கிரமிப்பு குணம் கொண்ட அமெரிக்கா, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும், கடல்சார் கொள்ளைச் செயலில் ஈடுபட்டதுடன், ஈரானின் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது… அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பல பயங்கரவாத கடற்படை வீரர்களைக் கப்பலின் தளத்தில் இறக்கி, அதன் வழிசெலுத்தல் அமைப்பை முடக்கியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த ஆயுதம் ஏந்திய கொள்ளைச் செயலுக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் மற்றும் பழிவாங்கும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

