உதாரணமாக, நீங்கள் 7,00,000 ரூபாயை 5 வருடத்திற்கு 7.50% வட்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன்படி, திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்கு மொத்தம் ரூ.10,14,964 கிடைக்கும். அதாவது, இதில் வட்டி மட்டுமே சுமார் ரூ.3,14,964 கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் அரசு ஆதரவு பெற்ற திட்டங்கள் என்பதால் ரிஸ்க் இல்லாத வருமானம் கிடைக்கும். ஆகையால், நீண்ட காலத்திற்கு நிலையான வருமானம் பெறலாம்.


