ஹார்முஸ் நீரிணை வழியாகத் தனது பயணத்தைத் தொடர முயன்ற இந்தியக் கப்பலை ஈரானிய இராணுவம் தடுத்து நிறுத்தி அதன் பயணத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிடும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தனது நாட்டுத் துறைமுகங்கள் மீது தொடர்ந்து கடற்படை முற்றுகையை மேற்கொண்டு வருவதற்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள்
இதையடுத்து, ஈரானியக் கடற்படையினரின் இந்த நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த இந்தியக் கப்பல் தனது பயணத்தை இடைநிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் கடும் மோதல் போக்கு தற்போது சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது.
அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டும் ஈரான், நீரிணையின் கட்டுப்பாட்டை மீண்டும் தனது கையில் எடுத்துள்ளதால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் இப்போது கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

