ஊடக நிறுவனமொன்றிற்கு எதிராக, விவசாய கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்படி ஊடக நிறுவனம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக்கொண்டு இந்த கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி கோரிக்கை கடிதம் அமைச்சரின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அது நேற்றைய தினம் பதிவுத் தபால் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அந்த ஊடக நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமது சொத்து விபரம் தொடர்பில் போலியான மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டு அவற்றை சமூகமயப்படுத்தி தமது நற்பெயருக்கும் எதிர்கால அரசியல் பயணத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் படங்கள் மற்றும் ஊடகத்தை தவறாக பயன்படுத்தியமையினால் அமைச்சரினால் இந்த கோரிக்கைக் கடிதம் அனுப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
