• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

CSK vs SRH : டிவிஸ்ட் மேல ட்விஸ்ட்.. பரபரப்பான கடைசி ஓவரில் சென்னை அணி ஐதராபாத்திடம் தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
CSK vs SRH : டிவிஸ்ட் மேல ட்விஸ்ட்.. பரபரப்பான கடைசி ஓவரில் சென்னை அணி ஐதராபாத்திடம் தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மின்னல் வேகத் தொடக்கம் தந்தார். அவர் வெறும் 22 பந்துகளில் 59 ரன்கள் (4 பவுண்டரி, 6 சிக்ஸர்) விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 23 ரன்கள் எடுத்தார். கேப்டன் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினாலும், ஹென்ரிச் கிளாசன் தனது அதிரடியால் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கிளாசன் 39 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் நிதீஷ் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும் எடுத்த அணியை மீட்டெடுக்க முயன்றனர். மேத்யூ ஷார்ட் 34 ரன்களும், சர்பராஸ் கான் 25 ரன்களும் எடுத்து மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளித்தனர்.

இறுதிக்கட்டத்தில் ஷிவம் துபே 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஆட்டம் அடுத்தடுத்த ஓவர்களில் இரு அணிகளுக்கும் சாதகமாக சென்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜேமி ஓவர்டனுக்கு சன்ரைசர்ஸ் பவுலர்கள் யார்க்கர்களை தொடர்ந்து வீசியதால் அவரால் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

இடையே ரன் அவுட் மிஸ்ஸிங், நோ பால், ஃபீல்டிங் மிஸ் என சன்ரைசர்ஸ் வீரர்கள் சென்னைக்கு தொடர்ந்து வாய்ப்புகளை அளித்துக் கொண்டே இருந்தனர். கடைசி 2 ஓவர்களில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, 19 ஆவது ஓவரில் அன்சுல் கம்போஜ் சிக்சர் பறக்க விட்டார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டபோது அற்புதமாக பந்து வீசிய பிரபுல் ஹின்ஜ் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐதராபத்தின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 184 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் மற்றும் -0.780 நெட் ரன்ரேட்டுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 4 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Read More

Previous Post

ஈரானுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு நெருக்கடி : தயாராகும் அமெரிக்க இராணுவம்

Next Post

அடுத்த மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்காக BN தனது தொகுதி பங்கீட்டு முறையைத் தொடர்ந்து பேணும். – Malaysiakini

Next Post

அடுத்த மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்காக BN தனது தொகுதி பங்கீட்டு முறையைத் தொடர்ந்து பேணும். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin