• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. ஆர்.சி.பி-யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. ஆர்.சி.பி-யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 18, 2026 7:40 PM IST

அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 34 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி அதிரடி காட்டியது.

டேவிட் மில்லர் - ஸ்டப்ஸ் இணை
டேவிட் மில்லர் – ஸ்டப்ஸ் இணை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். விராட் கோலி 19 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

டிம் டேவிட் 26 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டெல்லி தரப்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் லுங்கி என்கிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தொடக்கம் சற்று பின்னடைவாக அமைந்தது.

புவனேஷ்வர் குமாரின் அபார பந்துவீச்சில் பதும் நிசங்கா 1 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், மற்றும் சமீர் ரிஸ்வி 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் 18 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் டெல்லி தடுமாறியது. இருப்பினும், கே.எல். ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அணியை மீட்டெடுத்தது.

அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 34 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி அதிரடி காட்டியது. ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

அவருக்குத் துணையாக டேவிட் மில்லர் வெறும் 10 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். இறுதியில் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து டெல்லி கேபிடல்ஸ் வெற்றி இலக்கை எட்டியது.

Read More

Previous Post

இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்! – Sri Lanka Tamil News

Next Post

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்: ஈரான் அறிவிப்பு; ட்ரம்பின் எதிர்வினை என்ன?|Hormuz Drama: Iran Shuts Strait Again

Next Post
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்: ஈரான் அறிவிப்பு; ட்ரம்பின் எதிர்வினை என்ன?|Hormuz Drama: Iran Shuts Strait Again

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்: ஈரான் அறிவிப்பு; ட்ரம்பின் எதிர்வினை என்ன?|Hormuz Drama: Iran Shuts Strait Again

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin