Last Updated:
அதிகமான விலையில் விற்பனையாகும் இந்த ஆர்ட்டிசோக் சூப் செய்வதற்கு அதிகம் பயன்படுகிறது. இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை கொண்டதால் இதன் விலையும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பல்வேறு மலை காய்கறி பயிர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிர் செய்யப்படுகிறது.
நாளுக்கு நாள் பல்வேறு ஆங்கில காய்கறி பொருட்கள் மற்றும் சைனீஸ் காய்கறி வகைகள் அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு காய்கறி பொருட்களையும் விளைவித்து அதிகமான லாபம் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய முக்கியமான ஒரு சில காய்கறி வகைகள் எங்கு தேடினாலும் கிடைக்காதவையாக உள்ளது. அவ்வாறு டிமாண்ட் ஆன ஒரு காய்கறி வகை தான் ஆர்ட்டிசோக் எனப்படும் ஒரு காய்கறி வகை.
இதற்கு முன்னதாக முள்ளிக்கொரை பகுதியில் ஒரே ஒரு விவசாயி மட்டும் இதனை பயிரிட்டு வந்தார். இதய நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டதால் இதன் பெயர் ஆர்ட்டிசோக் எனவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு விவசாயி கேரட் தோட்டத்தில் தோட்டத்தின் ஓரங்களில் ஊடுபயிராக இதனை விளைவித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகமான விலையில் விற்பனையாகும் இந்த ஆர்ட்டிசோக் சூப் செய்வதற்கு அதிகம் பயன்படுகிறது. இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை கொண்டதால் இதன் விலையும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் மத்தியில் இதன் மதிப்பு தற்பொழுது தான் உணரத் தொடங்கியுள்ளதால் பல்வேறு விவசாய நிலங்களிலும் அரிதாக காணக்கூடிய ஒரு காய்கறி வகையாக இந்த காய்கறி பயிர் தென்பட்டுள்ளது.
The Nilgiris,Tamil Nadu
Apr 18, 2026 11:31 AM IST

