உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஜெர்மனியின் ஹேபாக்-லாயிட் (Hapag-Lloyd), ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதை ஒரு நல்ல செய்தி என்று வரவேற்றுள்ளது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதியில் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஆறு கப்பல்கள் சிக்கியுள்ள நிலையில், நீரிணை மீண்டும் செயல்பாட்டிற்கு வருவது தங்களுக்குக் கிடைத்துள்ள பெரிய ஆறுதல் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மீண்டும் அந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பு கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு விதிமுறைகள் (Insurance coverage) குறித்து கூடுதல் தெளிவு தேவைப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்புப் படை
குறிப்பாக எந்தக் கடல் வழித்தடத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினரின் (IRGC) புதிய நிபந்தனைகள் குறித்தும் அதிகாரிகளிடமிருந்து முறையான விளக்கங்களைப் பெற ஹேபாக்-லாயிட் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தச் சிக்கல்கள் அடுத்த 24 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படக்கூடும் என்றும் அதன்பிறகு முடிந்தவரை விரைவாக நீரிணையைக் கடக்க விரும்புவதாகவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகளாவிய சரக்குப் போக்குவரத்தில் நிலவி வரும் தேக்கநிலையைச் சீர்செய்ய இது ஒரு முக்கியத் தொடக்கமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

