அதுவே, அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல், போர் முடிவுக்கு வரவில்லை என்றால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஆகையால், இதை பொறுத்தே தங்கம் விலை உயரவும் சரியவும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக நிபுணர்கள் கூறும்போது, அட்சய திருதியைக்கு ஓரிரு நாட்களே உள்ளதால், தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று கணித்துள்ளனர். அப்படியே தங்கம் விலை சரிந்தாலும், பெரிய மாற்றம் இருக்காது என்று கூறுகின்றனர். நிபுணர்களின் கணிப்பின்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,10,000 முதல் ரூ.1,20,000 என்ற விலைக்குள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.


