Last Updated:
ஷ்ரேயாஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரயான் ரிக்கெல்டன் 2 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தனர்.
பின்னர் இணைந்த நமன் திர் – குவின்டன் டி காக் இணை அற்புதமாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து நமன் திர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குவின்டன் டி காக் 60 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 195 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியினர் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 15 ரன்னிலும், அடுத்து வந்த கூப்பர் கொனோலி 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த பிரப்சிம்ரன் சிங் – ஷ்ரேயாஸ் ஐயர் இணை அற்புதமாக பார்ட்னர்ஷிப அமைத்து ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஷ்ரேயாஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார். 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்த பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
Apr 16, 2026 11:48 PM IST

