• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை – ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை – ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பல் திருப்பி அனுப்பியதுடன் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு விட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

முற்றுகையின் ஒரு பகுதியாக அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ஓமான் வளைகுடாவில் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளது. 

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு புதன்கிழமை x தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் இதனைக் தெரிவித்துள்ளது.

பலத்தைப் பயன்படுத்துவோம்

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு அமெரிக்கா முறைப்படி முற்றுகையிட்டுள்ளது. இந்த முற்றுகையை மீற முயற்சிக்காதீர்கள். கப்பல்கள் வழிமறிக்கப்பட்டு, கைப்பற்றப்படும்.

  

கப்பல்கள் “திரும்பி வந்து, கைப்பற்றப்படுவதற்குத் தயாராக வேண்டும்” என்று அது மேலும் எச்சரிப்பதோடு, “இந்த முற்றுகைக்கு நீங்கள் இணங்கவில்லை என்றால், நாங்கள் பலத்தைப் பயன்படுத்துவோம். அமெரிக்கக் கடற்படை முழுமையும் இணங்கச் செய்யத் தயாராக உள்ளது” என்றும் குறிப்பிடுகிறது. 

கட்டுப்பாடுகளை மீற முயன்ற ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை, யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (DDG 111) என்ற அமெரிக்கப் போர்க்கப்பல் சமீபத்தில் திருப்பி அனுப்பியது. 

ஏற்கனவே குறைந்தது 10 கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், இந்த முற்றுகை தொடங்கப்பட்டதிலிருந்து “ஒரு கப்பல் கூட” அதை மீறவில்லை என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம், ஈரானுக்கான கடல்வழி வர்த்தகப் பாதைகளைத் துண்டித்து, அதன் பொருளாதாரத்தை திறம்பட தனிமைப்படுத்துவதாகும்.

மத்திய கிழக்கில் பதற்றம்

ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தபோதிலும், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முற்றுகை நீக்கப்படாவிட்டால் வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தகத்தை நிறுத்திவிடுவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளது, இது பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அபாயத்தை உணர்த்துகிறது. 

அதே நேரத்தில், இந்த மோதல் “முடிவுக்கு மிக அருகில்” இருக்கலாம் என்றும், பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மோதி விட்டு தப்பி சென்ற போலீஸ் ஆய்வாளர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் | Makkal Osai

Next Post

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – Sri Lanka Tamil News

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin