Last Updated:
பெங்களூரு அணியில் விராட் கோலி 34 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அரைசதத்தை தவறவிட்டார். கேப்டன் ரஜத் படிதார் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணி, லக்னோ அணியை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிக்குள்ளாக்கியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 40 ரன்களும், ஆயுஷ் பதோனி 38 ரன்களும் சேர்த்தனர்.
இளம் வீரர் முகுல் சவுத்ரி 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக, அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ராசிக் சலாம் தார் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி 34 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அரைசதத்தை தவறவிட்டார். கேப்டன் ரஜத் படிதார் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார்.
ஜித்தேஷ் சர்மா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதியில் டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 14 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பெங்களூரு அணி 15.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Apr 15, 2026 11:27 PM IST


