Last Updated:
டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலும், கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலும், ஹரியானாவில் நயப் சைனி தலைமையிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பிகாரில் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்கவுள்ள நிலையில், இந்தியாவில் 64 சதவீத மக்கள் அக்கட்சியின் ஆளுகைக்குக் கீழ் வந்துள்ளனர்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக கணிசமான இடங்களில் வென்றது. இந்நிலையில், பிகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ் குமார், எம்.பி.யாக பதவியேற்றதால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் முதல் முறையாக பிகாரில் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பொறுப்பேற்கிறார். பிகாரைத் தவிர உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலும், குஜராத்தில் புபேந்திர பட்டேல் தலைமையிலும், மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலும், மகாராஷ்டிராவில் பட்னவிஸ் தலைமையிலும் பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது.
மேலும், டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலும், கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலும், ஹரியானாவில் நயப் சைனி தலைமையிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், மத்திய பிரதேசத்தில் ராஜஸ்தானில் பஜன்லால் சர்மாவும், ஒடிஷாவில் மோகன் மாஜியும் , அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வாவும் பாஜக முதலமைச்சர்களாக உள்ளனர்.
இதுதவிர, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜகவைச் சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக உள்ளனர். நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் பாஜக ஆளும் மாநிலங்களில் வசிக்கின்றனர்.


