மொனராகலை – வெல்லவாய பிரதான வீதியில் உள்ள புத்தல, உனவட்டுன பகுதியில், முச்சக்கரவண்டியொன்று வான் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த விபத்து இன்று புதன்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற நபரே, விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு வான் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே இவர்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் விபத்தில் காயமடைந்து, புத்தல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

