• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி To டேராடூன் இனி மின்னல் வேக பயணம்.. ஆசியாவின் நீண்ட வனவிலங்கு மேம்பாலத்துடன் மோடியின் மெகா திட்டம்.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லி To டேராடூன் இனி மின்னல் வேக பயணம்.. ஆசியாவின் நீண்ட வனவிலங்கு மேம்பாலத்துடன் மோடியின் மெகா திட்டம்.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 14, 2026 3:56 PM IST

விரைவுச்சாலையிலிருந்து பிரியும் கிளைச் சாலைகள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற ஆன்மீகத் தலங்களையும் விரைவாக இணைக்கின்றன.

News18
News18

டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான பயண நேரத்தைப் பாதியாகக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. சுமார் 210 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை, டெல்லியின் அக்ஷர்தாம் பகுதியில் தொடங்கி மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பாக்பத், ஷாம்லி, சஹாரன்பூர் வழியாக டேராடூனை அடைகிறது.

இதற்கு முன்பு டெல்லியிலிருந்து டேராடூன் செல்ல 6 முதல் 7 மணி நேரம் வரை ஆனது. தற்போது இந்த புதிய சாலையின் மூலம் இப்பயணம் வெறும் இரண்டரை மணி நேரமாகக் குறைந்துள்ளது. பழைய சாலையின் தூரம் 280 கி.மீ ஆக இருந்த நிலையில், புதிய வழித்தடம் மூலம் தூரம் 70 கி.மீ குறைக்கப்பட்டுள்ளது. கார் போன்ற வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் 6 வழிச்சாலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மிகச் சிறப்பான அம்சம், ராஜாஜி தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் 20 கி.மீ நீளமுள்ள வனப்பகுதியாகும். வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், 12 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆசியாவிலேயே மிக நீண்ட வனவிலங்கு மேம்பாலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகள் சாலைக்கு அடியில் தங்குதடையின்றி நடமாட முடியும். மேலும், வனப்பகுதிக்குள் 2.3 கி.மீ தூரத்திற்கு இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவுச்சாலையிலிருந்து பிரியும் கிளைச் சாலைகள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற ஆன்மீகத் தலங்களையும் விரைவாக இணைக்கின்றன. இதன் மூலம் டெல்லியிலிருந்து ஹரித்வாருக்கு 2 மணி நேரத்திலும், முசோரிக்கு 4 மணி நேரத்திலும் சென்றுவிட முடியும். இது உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாத்துறையை வெகுவாக மேம்படுத்தும்.

மேலும், விவசாயப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களை டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடிவதால், போக்குவரத்துச் செலவு குறைந்து வர்த்தகம் பெருகும்.

ஒட்டுமொத்தமாக, இந்த விரைவுச்சாலை உத்தரகண்ட் மாநிலத்தை தேசிய தலைநகர் பிராந்தியத்துடன் (NCR) நெருக்கமாக இணைத்து, அம்மாநிலத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

டெல்லி To டேராடூன் இனி மின்னல் வேக பயணம்.. ஆசியாவின் நீண்ட வனவிலங்கு மேம்பாலத்துடன் மோடியின் மெகா திட்டம்..

Read More

Previous Post

காட்டாட்சி அணுகுமுறை : அமெரிக்காவை கடுமையாக சாடிய சீன ஜனாதிபதி

Next Post

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட்டால், மடானி அரசால் ஆட்சியைத் தக்கவைக்க முடியுமா? – Malaysiakini

Next Post

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட்டால், மடானி அரசால் ஆட்சியைத் தக்கவைக்க முடியுமா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin