ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட ஐந்து அரபு நாடுகளிடம் ஈரான் இழப்பீடு கோரியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி ஆகியோருக்கு திங்களன்று எழுதிய கடிதத்தில், ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி,
போரின் போது ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு அந்த நாடுகள் துணை நின்றதன் மூலம் “தங்கள் சர்வதேச கடமைகளை மீறிவிட்டன” என்று கூறினார்.

image credit -reuters
எனவே, போரின் போது ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

