• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Parliamentary Delimitation | “இனி தாமதம் இருக்கக்கூடாது; இப்போதே செயல்படுத்தப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Parliamentary Delimitation | “இனி தாமதம் இருக்கக்கூடாது; இப்போதே செயல்படுத்தப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 14, 2026 6:21 PM IST

”நாடாளுமன்ற மறுவரையரை, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இனியும் தாமதம் கூடாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News18
News18

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையரை தொடர்பான மசோதா நாளை மறுநாள் (16ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இதன் மூலம், நாடாளுமன்றத் தொகுதிகள் 850 என உயரும். இதில் மக்களவைத் தொகுதிகள் 815 எனவும், யூனியன் பிரதேச தொகுதிகள் 35 எனவும் உயரும். மேலும், இந்த மசோதாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் 280 பெண்களுக்கு இடம் கிடைக்கும்.

இதற்கான 131வது அரசியல் சாசன மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இன்று காணொளியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சாதனைப்படுத்திய தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரையறை தண்டனையா? இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் தமிழ்நாடு முழு அளவிலான போராட்டத்தில் ஈடுபடும்” என தெரிவித்து மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

உத்தரகாண்ட், டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதா இது. அனைத்துக் கட்சிகளும் முன்வந்து, இந்த முக்கியமான சட்டத்திற்கு ஆதரவளித்தன.

“இப்போது இதைச் செயல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் இருக்கக்கூடாது. இது இப்போதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 2029-ஆம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதுவே தேசத்தின் உணர்வு. இதுவே நாட்டின் ஒவ்வொரு சகோதரியின் மற்றும் மகளின் விருப்பம்.

#WATCH | Dehradun, Uttarakhand: PM Narendra Modi says, “After decades of waiting, Parliament passed the ‘Nari Shakti Vandan Adhiniyam’. This ensured 33% reservation for women in the Legislative Assembly and Lok Sabha. All parties came forward and supported this important law. Now… pic.twitter.com/TkA89IbhTg


— ANI (@ANI) April 14, 2026

ஏப்ரல் 16-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதுகுறித்த ஒரு சிறப்பு விவாதம் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒருமனதாக இந்தச் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என பேசியுள்ளார்.

Location :

Uttarakhand (Uttaranchal)

Read More

Previous Post

Tamilmirror Online || அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: ஜனாதிபதி வாழ்த்து

Next Post

“துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது தன்னாட்சி முறைக்கு எதிரானது”: ஈரான் கடும் கண்டனம்! | Makkal Osai

Next Post
“துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது தன்னாட்சி முறைக்கு எதிரானது”: ஈரான் கடும் கண்டனம்! | Makkal Osai

"துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது தன்னாட்சி முறைக்கு எதிரானது": ஈரான் கடும் கண்டனம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin