இந்நிலையில், “அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை கடற்கொள்ளைக்கு சமமானது” என்று குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் ராணுவம், அண்டை நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. மட்டுமன்றி, “வளைகுடா பகுதியில் எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது” என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் துறைமுகங்கள் அச்சுறுத்தப்பட்டால், அண்டை நாடுகளின் துறைமுகங்களும் தப்பாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


