Last Updated:
உலகின் வளர்ந்த நாடுகளை விட அதிகமாக, இந்தியாவில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு சட்டம் என்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் சட்டம்’ குறித்து டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது வெறும் சட்டம் மட்டுமல்ல, அது 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் தீர்க்கமான முடிவுகளில் ஒன்றாகும். சுமார் 40 ஆண்டுகால நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு இந்த மசோதா உயிர் பெற்றுள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எங்களது முன்னுரிமை மற்றும் இலக்கு” எனத் தெரிவித்தார்.
நிர்வாக அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் போது, அந்த அமைப்பு அதிக சமூக நீதி மிக்கதாகவும் மாறும் என பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக, ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் வெற்றிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள லட்சக்கணக்கான பெண்களின் அனுபவமே காரணம் என்று அவர் பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது- உலகின் வளர்ந்த நாடுகளை விட அதிகமாக, இந்தியாவில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே பஞ்சாயத்து அமைப்புகளில் சுமார் 50 சதவீத பிரதிநிதித்துவத்துடன் 14 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது புதிய இந்தியாவின் விடியல் என்று தெரிவித்தார்.
Women Reservation Bill : 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவு.. மகளிர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!


