சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த உடுகம்பொல அலயா என அழைக்கப்படும் நபரே இவ்வாறு இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என குறிப்பிடப்படுகின்றது.
நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
இந்தநிலையில் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையைத் தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சந்தேகநபர் தொடர்பான விபரங்களை எதிர்வரும் நாட்களில் இலங்கை காவல்துறையினருக்கு அறிவித்து, அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதாள உலகக் குழு தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கடந்த வருடம் பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

