ஏப்ரல் 26: இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த மாதம் மொத்தம் ஆறு வார இறுதி நாட்களும், பல பிராந்திய விடுமுறை நாட்களும் உள்ளன. ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில் இந்த விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஆகையால், வங்கிகளுக்கு நேரில் செல்வதற்குப் பதிலாக, மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றன. வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், உங்கள் கூகுள் பே, ஃபோன்பே மற்றும் ஏடிஎம் சேவைகள் முன்பைப் போலவே தொடர்ந்து செயல்படும். ஆன்லைனில் பணம் அனுப்புவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.


