லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேலிய இலக்குகள் மீது, படையினரின் நிலைகள் மற்றும் வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஒரு புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கைகளில்,
பின்ட் ஜ்பெயிலிலும், மைஸ் அல்-ஜபலில் உள்ள ஆசி ஹைட்ஸ் பகுதிக்கு அருகிலும் இஸ்ரேலியப் படைவீரர்கள் மற்றும் வாகனங்கள் கூடியிருந்த இடங்களைத் தாக்கப்பட்டது.
இஸ்ரேலிய நகரம்
அன்றைய தினம் பிற்பகுதியில், இஸ்ரேலிய நகரமான கிரியாட் ஷ்மோனா மற்றும் நஹாரியாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

மேலும், ஜாத்தூனில் உள்ள இஸ்ரேலிய இராணுவப் பிரிவு ஒன்றின் தலைமையகத்தையும் தமது படை குறிவைத்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

