பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, ஈரானுக்கு பாகிஸ்தான் சார்பில் ராணுவ அழுத்தம் கொடுக்கப்பட்டதாக CNN மற்றும் News18-க்கு தகவல் கிடைத்துள்ளன. உளவுத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்த இந்த தகவல், பாகிஸ்தான் தூதரகத்தின் வெற்றியாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் தன் திட்டத்தில் தோற்றுள்ளது. ஆம், பேச்சுவார்த்தையில் ஈரான் – அமெரிக்கா இடையே சுமூக நிலை ஏற்படவில்லை.


