• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : சென்னை அணிக்கு முதல் வெற்றி.. டெல்லி கேபிடல்ஸை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2026 : சென்னை அணிக்கு முதல் வெற்றி.. டெல்லி கேபிடல்ஸை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 11, 2026 11:40 PM IST

சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் சென்னை அணி 212 ரன்கள் எடுத்தது

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு முதல் வெற்றியை இன்று பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன்  அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 15 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் – ஆயுஷ் மாத்ரே இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது.

பவர் ப்ளே ஓவர்களில் ஓரளவு சென்னை அணி ரன்கள் சேர்த்தாலும், அடுத்து வந்த ஓவர்களை நன்றாக பயன்படுத்தி ரன்கள் குவித்தது. 27 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைச்சதம் கடந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரேவும் அரைச்சதம் அடித்து அசத்தினார். மேலும் டெல்லி அணியினர் தங்களுக்கு கிடைத்த கேட்ச், ரன் அவுட் உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகம் தவற விட்டனர்.

52 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 14 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் ஏற்கனவே மூன்று சதங்களை பதிவு செய்துள்ள சஞ்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார்.

36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த ஆயுஷ் மாத்ரே ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சிவம் துபே 10 பந்துகளில் 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் சென்னை அணி 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து நிசாங்கா 41 ரன்களில் வெளியேறினார்.

சமீர் ரிஸ்வி 6 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 1 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். டேவிட் மில்லர் 17 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஓரளவு தாக்குப்பிடித்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 189 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.

First Published :

Apr 11, 2026 11:40 PM IST

Read More

Previous Post

யாழில் இளைஞர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு

Next Post

உலகின் மிக விலையுயர்ந்த டிரோன் இது – பறக்கும்போதே நடந்த திடீர் சம்பவம்.. திக்கு தெரியாமல் தவிக்கும் அமெரிக்கா! | உலகம் போட்டோகேலரி

Next Post
உலகின் மிக விலையுயர்ந்த டிரோன் இது – பறக்கும்போதே நடந்த திடீர் சம்பவம்.. திக்கு தெரியாமல் தவிக்கும் அமெரிக்கா! | உலகம் போட்டோகேலரி

உலகின் மிக விலையுயர்ந்த டிரோன் இது - பறக்கும்போதே நடந்த திடீர் சம்பவம்.. திக்கு தெரியாமல் தவிக்கும் அமெரிக்கா! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin